Published:Updated:

நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் 6 மாத குட்டி யானை - வனத்துறை விசாரணை

நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் 6 மாத குட்டி யானை - வனத்துறை விசாரணை
நீலகிரி தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் 6 மாத குட்டி யானை - வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், குட்டி யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.

தேயிலைத் தோட்டத்திற்கு  வேலைக்குச் சென்ற பணியாளர்கள், யானை இறந்து கிடப்பது குறித்து தோட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில்  கூடலூர் கோட்ட வன அலுவலர்  சுமேஷ் சோமன், வனச்சரகர் ராமகிருஷ்ணன்,  வனக்காவலர்கள் சங்கர் மற்றும் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்த குட்டி யானையைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  

சுமார் 6 மாதங்களே வயதுடைய இந்தக் குட்டி யானை, உயரமான பகுதியில் இருந்து சறுக்கி விழுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்  கால்நடை மருத்துவர் நந்தினி, இறந்த குட்டி யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தார்.  பிரேதப் பரிசோதனைக்குப் பின், குட்டி யானையின் உடல்  வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.  பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே யானை இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.