Published:Updated:

பற்றி எரியும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு.. விபத்துக்கு யார் காரணம்?

பற்றி எரியும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு.. விபத்துக்கு யார் காரணம்?
பற்றி எரியும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு.. விபத்துக்கு யார் காரணம்?

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பற்றி எரியும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு.. விபத்துக்கு யார் காரணம்?

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் குப்பைக் கிடங்கில் பல ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இங்கு கடந்த மூன்று நாள்களாக தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அந்தப் பகுதி சுற்று வட்டாரம் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிப்பதால் அப்பகுதிவாசிகளும் குழந்தைகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தகவலறிந்து குப்பைக் கிடங்கை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டு துரிதப்படுத்துமாறு தீயணைப்பு வீரர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 9 மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில், எரிந்து வரும் தீயை அணைக்க சூலூர் விமானப் படைக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு குப்பைக் கிடங்கில் எரியும் தீ மீது ஊற்றப்பட்டு வருகிறது. இரண்டு நாள்களாகத் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க முடியாததால் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் முழுமையாக தீ அணைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பற்றி எரியும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு.. விபத்துக்கு யார் காரணம்?

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், 25 லட்சம் மெட்ரிக் டன் குப்பை இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தவறான தகவல் கூறப்பட்டது. இதனிடையே,  நீதிபதி ஜோதிமணி கடந்த வாரம் ஆய்வு செய்தபோது, மலைபோல் குவிந்து கிடந்த குப்பையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிகாரிகளுக்கு செம டோஸ் விட்டு, அறிவியல் பூர்வமாக குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். எனவே, அதிகாரிகள்தான் தீயைப் பற்ற வைத்துள்ளனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பொதுவாகவே, பட்ஜெட் நேரத்தில் குப்பைக் கிடங்கில் தீ விபத்தை உருவாக்கி, அதில் ஒரு தொகை பார்ப்பார்கள். நடப்பு பட்ஜெட்டில், குப்பைக் கிடங்குக்கு ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பெரிய தொகை பார்ப்பதற்காகதான் இந்த விபத்து திட்டமிடப்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

ஆனால், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவன் குமார் ஜடாவத், தீ விபத்துக்கு பொதுமக்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார். மூன்று நாள்களுக்கு மேலாக புகை பரவி வருவதால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில், ஸ்ரவன் குமாரின் கருத்து மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.