Published:Updated:

‘அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து!’ - அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய கேரள பயணிகள்

‘அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து!’ - அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய கேரள பயணிகள்
‘அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து!’ - அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய கேரள பயணிகள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெங்களூருக்குச் சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

‘அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து!’ - அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய கேரள பயணிகள்

கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியிலிருந்து நேற்று இரவு பெங்களூரு நோக்கிப் புறப்பட்டது கேரள அரசுக்குச் சொந்தமான ஒரு சொகுசுப் பேருந்து. ஜெய்சன் என்ற நபர் பேருந்தை இயக்கிய நிலையில் சுமார் 26 பேர் அந்தப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த அப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அவிநாசி காவல்துறையினர், தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியுடன் சிதைந்துபோய் அந்தரத்தில் தொங்கிய நிலையில் கிடந்த சொகுசு பேருந்தில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இந்த விபத்தில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சைடா டேவிட், விஜிதா, கிருஷ்ணநந்தா, சுகில், கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஜோபி, பத்தினம்திட்டாவை சேர்ந்த சாஜா தாமஸ், சூபி, லிட்டி மேத்யூ, சுஜேஸ் குமார், அச்சயா, பிரதீப் குமார் மற்றும் தன்யா உள்ளிட்ட 6 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் காயமடைந்தனர்.  மீட்கப்பட்டவர்களை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் ஜெய்சன் மதுபோதையில் பேருந்தை இயக்கியது தெரிய வந்திருக்கிறது. இந்த விபத்தில் பயணிகள் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது சற்று நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.