Published:Updated:

எழும்பூர் கார் விபத்து: சிக்குகிறார் அமைச்சர் வயலார் ரவி உறவினர்!

எழும்பூர் கார் விபத்து: சிக்குகிறார் அமைச்சர் வயலார் ரவி உறவினர்!
எழும்பூர் கார் விபத்து: சிக்குகிறார் அமைச்சர் வயலார் ரவி உறவினர்!

எழும்பூர் கார் விபத்து: சிக்குகிறார் அமைச்சர் வயலார் ரவி உறவினர்!

எழும்பூர் கார் விபத்து: சிக்குகிறார் அமைச்சர் வயலார் ரவி உறவினர்!

சென்னை: சென்னை எழும்பூரில் நடந்த கார் விபத்தில் ஒருவர் பலியான வழக்கில் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் கடந்த 22ஆம் தேதி நள்ளிரவில்  கோ-ஆப்டெக்ஸ் சர்வீஸ் சாலையில் இருந்து பென்ஸ் கார் ஒன்று வேகமாக வந்தது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த பயணிகள் நிழற்குடை மற்றும் போலீஸ் ஜீப் ஆகியவற்றில் மோதியது.

இதில், பயணிகள் நிழற்குடை அருகே தூங்கிக் கொண்டிருந்த வியாபாரி குமார் என்பவரின் மகள் சுபரக்ஷிதா, தியாகராஜன் மகன் முனிராஜ், பேனர் கட்டிக் கொண்டிருந்த அமைந்தகரை ராஜாமொய்தீன், மயிலாப்பூர் மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், சிறுவன் முனிராஜ், மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களுடன் வந்த எம்.பி. டிஸ்லரீஸ் என்ற மதுபான ஆலை உரிமையாளர் புருஷோத்தமன் மகன் சாஜி தப்பிவிட்டார். டிரைவர் குமார் என்பவர் காரை ஓட்டியதாக அவர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றவர்களை விடுவித்தனர்.

புருஷோத்தமன் மகன் சாஜி என்பவர்தான் காரை ஓட்டியதாகவும், அவரை காப்பாற்ற, குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய நபருக்கு பதிலாக வேறு நபர் மீது வழக்குப் பதிவு செய்தது, ஒரு சார்பாக நடந்து கொண்டது போன்ற காரணங்களுக்காக இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட டிரைவர் குமார் உண்மையில் சாஜியின் டிரைவர் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே எம்.பி டிஸ்ட்லரிஸ் குழுமத்தினருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டில் உள்ள குதிரைகளை பராமரிக்கும் பணியைச் செய்து வந்தவர்தான் இந்த குமார்.  'குதிரை குமார்' என்று அவருக்கு பட்டப் பெயர் உண்டு. அவ்வப்போது சென்னை வந்து முதலாளி வீட்டில் செலவுக்குப் பணம் வாங்கிச் செல்வது வழக்கம். விபத்து நடந்த அன்று கார் ஓட்டியதாக யாரை கைதுக்கு அனுப்பலாம் என்று யோசித்த எம்.பி டிஸ்ட்லரிஸ் குழுமத்தினர், பணம் கேட்டு வந்துள்ள  குமார் ஞாபகம் வரவும் அவருக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்து இவர்தான் கார் ஓட்டிய டிரைவர் என போலீஸில் ஒப்படைத்த‌தாக தெரிகிறது.

##~~##
கைதான குமார் வியாசார்பாடியில் தான் தங்கி இருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் போலீஸார் அந்த முகவரி கொண்ட வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்தபோது, அப்படி யாரும் குடியிருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவர் எம்.பி டிஸ்ட்லரிஸ் குழுமத்தில் யாருக்கும் கார் ஓட்டியதில்லை  என்ற அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது. இதனிடையே விபத்து நடந்த காரில் எம்.பி டிஸ்ட்லரிஸ் சாஜியுடன், மத்திய அமைச்சர் வயலார் ரவியின் நெருங்கிய உறவினர் ஒருவரும் உள்ளே இருந்ததாக தெரிகிறது. தலைமறைவாக உள்ள‌ சாஜியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் கைதாகும் பட்சத்தில் மொத்த உண்மையும் வெளிவரலாம்.
அடுத்த கட்டுரைக்கு