Published:Updated:

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo 

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo 
``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo 

ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo 

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில், அவசரமாகத் தரையிறங்கியது அந்த விமானம். சூப்பர் ஜெட் 100 விமானமான அது, மாஸ்கோவிலிருந்து வடக்கு ரஷ்ய நகரமான மர்மன்ஸுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் கோளாறு ஏற்பட, அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர் விமானிகள். அதற்குள் விமானத்தின் பின்பகுதியில் தீ பற்றிக்கொள்ள, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo 

தீ மளமளவெனப் பரவியது. தீயுடன் ரன்வேயில் ஓடி, பின் ஒருவழியாக் நின்றது. அவசர கால வழிமூலம் சில பயணிகள் தப்பினர். 73 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என 78 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில், சுமார் 37 பேர் பாதுகாப்பாக இருப்பதாக, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். 

 இந்த விபத்தில் 41 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எனினும் தற்போது வரை இந்த விபத்துக்கான காரணம்குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. விமானிகள், விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்கள் என்ற கோணத்தில் முதல்கட்ட விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo 

எனினும், இந்த விமான விபத்தில் இருந்து தப்பியவர்கள் சிலர், மோசமான வானிலையே இந்த விமான விபத்துக்குக் காரணம் என்கின்றனர். எகோரோவ் என்ற பயணி, ``விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தை மின்னல் ஒன்று தாக்கியது” என்றார். 
மற்றொரு பயணி, ``விமானம் புறப்பட்டது... உடனே திரும்பி மீண்டும் தரையிறங்கியது. என்ன காரணம் எனத் தெரியவில்லை. தரையிறங்கும்போது, தரையில் மோதுவதுபோல் வேகமாகத் தரையிறங்கியது” என்றார்.    

``ரன்வேயில் தீப்பிடித்து ஓடிய விமானம்!” - ரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo 

விமானம், ஓடுதளத்தில் பயங்கர தீயுடன் தரையிறங்கும் காட்சிகள் தற்போது இணையங்களில் பரவிவருகின்றன. இந்நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, அந்தப் பகுதியில் இரண்டு முறை வட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாகத் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.  

Vikatan