Published:Updated:

`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி

சத்யா கோபாலன்
`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி
`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி

மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலினின்ட்டுமான பாலபாஸ்கர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் அவரும் அவரின் குழந்தையும் உயிரிழந்தனர். மனைவி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, தற்போது நலமாக உள்ளனர்.

`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி

பாலபாஸ்கர் இறந்து ஏழு மாதங்கள் ஆன நிலையில், அவர் இறப்பு விபத்தல்ல கொலை என பாஸ்கரின் தந்தை உன்னி புகார் தெரிவித்துள்ளார். தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ப்ரகாஷ் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தங்களுக்கு பாலபாஸ்கரை தெரியும் என்றும் தான் அவரிடம் மேனேஜராகப் பணியாற்றினேன் எனவும் கூறியதால் இந்த சந்தேகம் வந்துள்ளது. மேலும், பாஸ்கரின் விபத்துக்குப் பிறகு நடந்த சில விஷயங்களை உன்னி கூறியதால் அவரின் மரணத்தில் சந்தேகம் வலுத்துள்ளது.  

கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாலபாஸ்கரின் போன்கால், சிசிடிவி கேமரா ஆகியவற்றை கேரள குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாலபாஸ்கரின் மனைவி லக்‌ஷ்மி இந்த விபத்து குறித்துப் பேசியுள்ளார். விபத்தினால் லக்‌ஷ்மிக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. தற்போது வரை அவரால் எழுந்து நடக்க முடியவில்லை, கைகளைத் தூக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். 

`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி

விபத்துக்குப் பிறகு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்த லக்‌ஷ்மி, ``என்னால் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மட்டுமே செல்ல முடியும் அதற்கும் பிறரது உதவி வேண்டும். எனக்கு உணவு வழங்குவது முதல் அனைத்து பெர்சனல் வேலைகளையும் என் அம்மாதான் பார்த்துக்கொள்கிறார். தற்போது எனக்கு இருக்கும் ஒரே ஆசை நான் சுயமாக நடந்தால் போதும். பாலபாஸ்கர் விபத்து மீது கூறும் குற்றச்சாட்டுகளால் எனக்கு என்ன பயன். அவரும் என் குழந்தையும் திரும்பி வந்துவிடுவார்களா?” எனத் தெரிவித்துள்ளார்.

`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி

விபத்து நடந்த அன்றைய தினம் பற்றிப் பேசியுள்ள லக்‌ஷ்மி, ``அன்று நாங்கள் அனைவரும் திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோயிலுக்குச் சென்றோம். தனக்குப் பிற வேலைகள் உள்ளன. அதனால் அன்றைய தினமே திருவனந்தபுரம் செல்ல வேண்டும் என்று திடீரென பாலா கூறினார். அதனால் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். அப்போது தனக்கு உடல் சோர்வாக உள்ளது. எனவே, நான் காரின் பின் இருக்கையில் படுத்து உறங்குகிறேன். டிரைவர் அர்ஜுன் வண்டியை ஓட்டட்டும் எனக் கூறிவிட்டு அவர் பின்னால் சென்று படுத்திருந்தார். நானும் என் குழந்தையும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தோம். குழந்தை என் மடியில் தூங்கிக்கொண்டிருந்தாள். 

டிரைவர் அர்ஜுன் தூங்கியதால் காரை விபத்துக்குள்ளாக்கினார் என என் பெற்றோர்கள், காவலர்கள் எனப் பலரும் கூறுகின்றனர். தூங்கியது அவரின் தவறு இல்லை. பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த பாலா சீட் பெல்ட் அணியவில்லை. ஆனால், அர்ஜுனும் நானும் அணிந்திருந்தோம். கணநேரத்தில் நடந்த விபத்தில் சீட் பெல்ட்டும், ஏர் பலூனும் அர்ஜுனைக் காப்பாற்றிவிட்டது. இருந்தும் அவர் இடுப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளானதில் என் நெற்றி டேஸ்போர்டில் பலமாக மோதியது. சீட் பெல்ட் என் கழுத்தை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. காரில் இருந்த ஒரு பெரிய கம்பி என் வயிற்றில் குத்தியது. 

`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி

பின் இருக்கையில் அமர்ந்திருந்த பாலாவுக்கும் பலத்த அடிபட்டது. அவரது உடல் முழுவதும் முன்னால் இருந்த சீட்டில் மோதியதால் அதிகமாகப் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் நான் மயங்கிவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளேன். நானும் இறந்துவிடுவேன் என்றுதான் மருத்துவர்கள் கருதியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாள்களுக்குப் பிறகு பாலாவுக்கு நினைவு வந்துள்ளது. அவர் கண் விழித்துள்ளார். ஆனால், பேச முடியவில்லை. முதலில் என்னைப் பற்றி விசாரித்துள்ளார், என்னைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். 

தன் வாழ்நாளில் பாலா எப்போதுமே சுயநலமாக இருந்ததில்லை. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார். அவரிடம் உள்ள தீய பழக்கமாக நான் கருதுவது, யாரையும் எளிதில் நம்பிவிடுவார். அதை மாற்றக் கோரி நானும் பலமுறை கூறியுள்ளேன். தனக்குக் காய்ச்சலாக இருக்கும் நேரத்தில்கூட வயலின் வாசிக்கமுடியவில்லை என்றால் மிகவும் வருந்துவார். பாலாவுக்கு உணவின் மீது அலாதி பிரியம். கலை ரீதியாக நடக்கும் தவறுகளை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். யாரேனும் தவறு செய்தால் அவர்களை எப்போதுமே தள்ளித்தான் வைத்திருப்பார். இப்படிப்பட்ட ஒருவர் எப்படி குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்க முடியும்.

`முன் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர் எங்களுடன் இருந்திருப்பார்!' - கலங்கும் பாலபாஸ்கர் மனைவி

பாலாவுக்கு மேனேஜர்கள் என்று யாரும் கிடையாது. அவருக்கு நிறைய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தெரியும் அவர்களில் ப்ரசாத் தம்பியும் ஒருவர் அவ்வளவுதான். மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கார் விபத்து நடந்த பிறகு, ப்ரசாத்தான் எங்களுடன் இருந்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் வரவில்லை. என் பெற்றோரிடம் கேட்டபோது ப்ரசாத்துக்கு வேறு வேலை இருப்பதால் இங்கு வரவில்லை எனக் கூறினர். 

பாலா இறக்கும் முன் சில இசை நிகழ்ச்சிகளில் ஒப்பந்தம் செய்திருந்தாராம். அவற்றை நடத்த முடியவில்லை என்பதால் நான் அதைச் செய்ய வேண்டும் எனப் பலர் கூறுகின்றனர். எனக்கு இசையை ரசிக்க மட்டுமே தெரியும் மற்றபடி ஒன்றும் தெரியாது. என்னால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில், இசை நிகழ்ச்சிகளை நடத்தித் தர சொன்னால் எப்படி முடியும். விபத்து நாள் அன்று பாலா மட்டும் முன் இருக்கையில் இருந்திருந்தால் இன்று என் அருகில் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். தொடர்ந்து வயலின் வாசித்துக்கொண்டிருப்பார். ஒரு வேளை நான் இறந்து பாலா உயிருடன் இருந்திருந்தால் இதுபோன்ற வதந்திகள் பேசப்பட்டிருக்காது” என உருக்கமாகப் பேசி முடித்தார். 

Vikatan