Published:Updated:

உள்வாங்கிய புதிய தார்ச்சாலை! - ரேஷன் பொருட்களுடன் புதைந்த லாரி #Shocking

உள்வாங்கிய புதிய தார்ச்சாலை! - ரேஷன் பொருட்களுடன் புதைந்த லாரி #Shocking
உள்வாங்கிய புதிய தார்ச்சாலை! - ரேஷன் பொருட்களுடன் புதைந்த லாரி #Shocking

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், புதியதாகப் போடப்பட்ட தார்ச்சாலையில் சென்ற சரக்கு லாரி, திடீரெனப் புதைந்து சரிந்தது. குமாரபாளையம் நகராட்சியில் தரமற்ற பணிகள் தொடர்ந்து நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உள்வாங்கிய புதிய தார்ச்சாலை! - ரேஷன் பொருட்களுடன் புதைந்த லாரி #Shocking

குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தார்ச்சாலை புதுப்பிக்கப்பட்டது. இந்தச் சாலையில், நேற்று மதியம் ரேஷன் பொருள்களை இறக்கச்சென்ற சரக்கு லாரி, திடீரெனப் புதைந்தது. சாலைக்கடியில் குறுக்காகச் செல்லும் சிறுபாலம் உடைந்து சக்கரம் புதைந்ததால், இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், லோடு ஏற்றும் தொழிலாளர்கள் காயமின்றித் தப்பினர். அரசுப் பள்ளிகள், விசைத்தறி கூடங்கள் நிறைந்த இந்தச் சாலையில், எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். நடுரோட்டில் லாரி சிக்கியதால், அந்த வழியாக சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் கொண்டுவரப்பட்டு, புதைந்த லாரியைப் போராடி மீட்டனர்.

உள்வாங்கிய புதிய தார்ச்சாலை! - ரேஷன் பொருட்களுடன் புதைந்த லாரி #Shocking

இதுபற்றிப் பேசிய அப்பகுதி மக்கள், ``குமாரபாளையம் நகராட்சியில் நடைபெறும் பணிகளில் தரம் குறைந்து போனதாகவும், தரத்தைப் பற்றிக் கவலைப்படாத அதிகாரிகளால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். அரசு மேல்நிலைப் பள்ளி சாலையில், விசைத்தறி ஜவுளி நிறுவனங்கள், சாய ஆலைகள், வீடு கட்டுமானப் பணிகளுக்கான கல், மணல் லாரிகள் சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் வந்துசெல்லும் இதுபோன்ற சாலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இவ்வாறான விபத்துகள் நிகழ்வதாகக் குற்றம்சாட்டினர்.

Vikatan