Published:Updated:

மதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்!

மதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்!
மதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்!

மதுரையில் பால்கனி கட்டடம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் 3  மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்!

மதுரை  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே உள்ளது, அரசு உதவிபெறும் ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளி. 150 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். பல்வேறு நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளியில் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாகப் பள்ளி இயங்கிவருவதால் கட்டடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. 

மதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்!

பள்ளியின் பல பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் இன்று திடீரென பள்ளியின் பால்கனி இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில் பால்கனியில் நடந்து சென்ற  ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவர்கள் குமரவேல், வீரக்குமார், சக்திவேல் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களைத் தீயணைப்பு மீட்புப் படையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மதுரையில் இடிந்து விழுந்த பள்ளியின் பால்கனி - 3 மாணவர்கள் படுகாயம்!

மூன்று மாணவர்களும் தலை மற்றும் கால் பகுதியில் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விளக்குத்தூண் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 150 வருடம் கடந்த பள்ளியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாதது வருத்தமளிப்பதாகவும், பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி உடனடியாகப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Vikatan