Published:Updated:

`கட்டட வேலை இல்லை’ - கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 3 பேருக்கு நேர்ந்த சோகம்!

கோவையில் வெண்பன்றி வளர்ப்பு பண்ணையின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான வெண்பன்றி வளர்ப்புக் கூடம் அமைந்துள்ளது. இதிலிருந்து  வெளியேறும் கழிவுகளை அருகில் உள்ள 10 அடி ஆழமுள்ள தொட்டியில் சேமிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், அந்தக் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவை இடையர்பாளையம் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த 6 பேர், நேற்று சென்றுள்ளனர். தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதலில் ராசப்பன் என்பவர் உள்ளே இறங்கியுள்ளார். இறங்கியவுடன் அதிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்க, ராசப்பன் மயக்கமடைந்திருக்கிறார். இதைக் கண்ட வேடியப்பன் என்ற பெயர்கொண்ட இருவர்  ராசப்பனைக் காப்பாற்றுவதற்காக உள்ளே இறங்கியிருக்கிறார்கள். அவர்களையும் விஷவாயு தாக்க, மூவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்  தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த  தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விஷ வாயு தாக்கி இறந்த மூன்று பேரும் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கோவை இடையர்பாளையம் கோவில்மேடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டட வேலை செய்து வந்ததாகவும், நேற்று கட்டட வேலை இல்லாததால் முதன் முறையாக இந்த வேலைக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. சுகாதாரமின்மை, தொழிலாளர்களை இறக்கி கழிவுகளை சுத்தம் செய்ய வைத்து உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த வெண்பன்றி பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அதன் உரிமையாளர் சுப்பிரமணியமும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு