Published:Updated:

2 ஆண்டுகளில் 3-வது வெடி விபத்து! - அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 

2 ஆண்டுகளில் 3-வது வெடி விபத்து! - அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.1903-ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியின்போது தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இன்றளவும் ராணுவ தளவாடங்களுக்கான வெடிபொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்டைட் எனப்படும் புகையில்லா வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் 1,500 பேர் பணியில் உள்ளனர். பகல் இரவாக உற்பத்தி நடைபெற்றுவருகிறது.

2 ஆண்டுகளில் 3-வது வெடி விபத்து! - அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

இந்த நிலையில்,  நள்ளிரவு 12.30 மணியளவில் CD செக்ஷன் எனப்படும் மருந்து கையாளப்படும் பிரிவில் 6 தொழிலாளர்கள் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். 3 பேர் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2 ஆண்டுகளில் 3-வது வெடி விபத்து! - அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கூறுகையில், ``CD செக்ஷனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் பழைமையான இயந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. நேற்று இரவு சம்பவம் நடைபெற்ற கட்டத்தில் 6 பேர் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்" என்றார்.