Published:Updated:

நடுவானில் தீப்பிடித்த விமானம், நிலத்தில் வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்க்!- கோவை விவசாயிகள் அதிர்ச்சி

கோவை சூலூர் விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடுவானில் தீப்பிடித்த விமானம், நிலத்தில் வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்க்!- கோவை விவசாயிகள் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூரில், இந்திய விமானப்படைதளம் உள்ளது. தொடக்கத்தில் கப்பல் படை வசம் இருந்த இது, பின்னர் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. விமான ஒத்திகைப் பயிற்சி, விமானங்களைக் கையாளும் பயிற்சி மற்றும் விமானங்களைப் பழுது பார்த்தல், பராமரிப்பு போன்ற பணிகள் இங்கு நடந்துவருகின்றன. இங்கிருக்கும் விமானங்களில், வீரர்கள் தினசரி பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, இன்று காலை தேஜஸ் ரக போர் விமானத்தில், இரண்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர். விமானம் இருகூர் அருகே செல்லும்போது, அதில் இருந்த ஒரு பாகம் வெடித்து விவசாய நிலத்தில் விழுந்தது. இதில், 3 அடி ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில், மக்கள் யாரும் இல்லாததால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, சூலூர் போலீஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

நடுவானில் தீப்பிடித்த விமானம், நிலத்தில் வெடித்துச் சிதறிய பெட்ரோல் டேங்க்!- கோவை விவசாயிகள் அதிர்ச்சி

``இரண்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது,1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கில் திடீரென்று தீப்பற்றியது.  இதனால், பாதுகாப்புக் கருதி வீரர்கள் அந்த டேங்கை கழற்றிவிட்டுள்ளனர். விமானமும் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை" என்று சூலூர் விமானப்படை தளம் விளக்கம் அளித்துள்ளது.