Published:Updated:

உத்தரகாண்ட்: மீண்டும் ஒரு மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது !

விகடன் விமர்சனக்குழு
உத்தரகாண்ட்: மீண்டும் ஒரு மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது !
உத்தரகாண்ட்: மீண்டும் ஒரு மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது !
உத்தரகாண்ட்: மீண்டும் ஒரு மீட்பு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது !

டேராடூன்: உத்தரகாண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு ஹெலிகாப்டர், இன்று விபத்தில் சிக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, ஹர்சில் என்ற இடத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி சேதமடைந்ததாக விமானப்படை செய்தி தொடர்பாளர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர்தானர்தான் இதேப்போன்று உத்தரகாண்டில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, மோசமான வானிலை காரணமாக

##~~##
விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியானார்கள். அதன் தாக்கம் மறைவதற்குள் மீண்டும் மீட்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.