Published:Updated:

இரவில் குறுக்குப் பாதை; தனியார் காட்டேஜுக்கு சீல்! - கல்லட்டி மலைப்பாதை வாகன விபத்தில் நடந்தது என்ன?

வாகன விபத்து

கல்லட்டி மலைப்பாதையில் இயங்கிவரும் காட்டேஜ் ஒன்றில் தங்குவதற்காக டெம்போ வேனில் நேற்று இரவு பயணித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த வேன், 15-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இரவில் குறுக்குப் பாதை; தனியார் காட்டேஜுக்கு சீல்! - கல்லட்டி மலைப்பாதை வாகன விபத்தில் நடந்தது என்ன?

கல்லட்டி மலைப்பாதையில் இயங்கிவரும் காட்டேஜ் ஒன்றில் தங்குவதற்காக டெம்போ வேனில் நேற்று இரவு பயணித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த வேன், 15-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

Published:Updated:
வாகன விபத்து

சரிவுகளும், கொண்டை ஊசி வளைவுகளும் நிறைந்த ஆபத்தான ஊட்டி, கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தலைக்குந்தா பகுதியில் காவல்துறை தரப்பிலும், கல்லட்டி பகுதியில் வனத்துறை தரப்பிலும்‌ சோதனைச் சாவடிகள் அமைத்து 24 மணி‌ நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதையும்‌ மீறி குறுக்குப் பாதையிலும், செல்வாக்கைப் பயன்படுத்தியும் வெளியூர் வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கல்லட்டி மலைப்பாதையில் பயணித்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாக இருக்கிறது.

வாகன விபத்து
வாகன விபத்து

இந்த நிலையில், சென்னையில் இயங்கிவரும் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின்‌ ஊழியர்கள் 18 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். கல்லட்டி மலைப்பாதையில் இயங்கி வரும் காட்டேஜ் ஒன்றில் தங்குவதற்காக டெம்போ வேனில் நேற்று இரவு பயணித்துள்ளனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், 15-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் உட்பட வேனில் இருந்த 19 பேரும் காயமடைந்தனர். படுகாயமடைந்த முத்துமாரி என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிர் பறிக்கும் ஆபத்தான சாலை என்பதை தெரிந்தும் சட்டவிரோதமாக வேனை இயக்கத் தூண்டியவர்கள்மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விபத்து குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், ``எங்களுக்குத் தெரியாமல் செல்ல வேண்டும் என்பதற்காக பக்கத்தில் இருக்கும் குறுக்குப் பாதையில் வேனை இரவில் இயக்கி கல்லட்டி மலைப்பாதையை அடைந்து பயணித்து விபத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

தனியார் காட்டேஜ்
தனியார் காட்டேஜ்

தடை செய்யப்பட்ட சாலை என தெரிந்தும் இவர்களை தவறாக வழி நடத்திய தனியார் காட்டேஜ் உரிமையாளர் வினோத் குமார், அவர் உதவியாளர் ஜோசப் ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கிறோம். அந்த காட்டேஜ் சீல் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.