Published:Updated:

பட்டாசு ஆலை விபத்து விவகாரம்: பேரம் பேசிய கலெக்டர் கார் டிரைவர்!

Vikatan Correspondent
பட்டாசு ஆலை விபத்து விவகாரம்: பேரம் பேசிய கலெக்டர் கார் டிரைவர்!
பட்டாசு ஆலை விபத்து விவகாரம்: பேரம் பேசிய கலெக்டர் கார் டிரைவர்!

விருதுநகர்: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரங்களில், கலெக்டர் பெயரை சொல்லி பேரம் பேசியதாக அவரது டிரைவர் சிக்கியுள்ளார். இதனால் அவரை வேறு இடத்துக்கு மாற்ற கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு ஆலை விபத்து விவகாரம்: பேரம் பேசிய கலெக்டர் கார் டிரைவர்!

சிவகாசி பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர் ஹரிகரன் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 50 பட்டாசு ஆலைகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளன. 100க்கும் அதிகமான விதிமுறைகளை மீறிய பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பட்டாசு ஆலைகளில் ஆய்வுக்கு செல்லும் கண்காணிப்பு குழுவினர் ‘லஞ்சம்’ வாங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பட்டாசு ஆலை விபத்து விவகாரம்: பேரம் பேசிய கலெக்டர் கார் டிரைவர்!

இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பெறப்பட்ட ஆலைகள் தங்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்க, எல்லாவிதமான வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட  அதிகமான வெடிகளை வைத்திருந்தால் அதற்கு ஒரு ரேட் (அதுதாங்க லஞ்சம்), அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்திருந்தால் ஒரு ரேட், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையின் சஸ்பெண்ட்டை ரத்து செய்ய ஒரு ரேட் என்று நிர்ணயித்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் பெரிய வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

##~~##
இந்நிலையில் சமீபத்தில் விதிமுறை மீறல்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் பெற்ற சில பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.

கலெக்டர் கார் நிற்கும் போர்டிகோவில் இருந்த கலெக்டர் டிரைவர் வரதராஜன் என்பவர், 'நீங்க பட்டாசு ஆலை உரிமையாளர்களா?' என்று கேட்டு, 'உங்கள் பிரச்னைகளை நான் பார்த்துக்கிறேன். கலெக்டர் டிரைவர் நான். நான் என்ன சொன்னாலும் கலெக்டர் ஹரிகரன் கேட்பார். ஒரு லட்சம் கொடுங்கள். உங்கள் பட்டாசு ஆலை பிரச்னையை தீர்த்து வைக்கிறேன்' என்று சொல்லி பேரம் பேசினாராம். பட்டாசு ஆலை உரிமையாளர்கள், 'நாங்கள் கலந்து பேசி விட்டு சொல்லுகிறோம்' என்று சொல்லி நழுவி விட்டடார்களாம்.

இதை மோப்பம் பிடித்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், இந்த விசயத்தை கலெக்டர் ஹரிகரனிடம் சொல்ல, கடுப்பான கலெக்டர்,  இது பற்றி விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

உடனே அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க, கலெக்டர் கார் டிரைவர் வரதன் லஞ்சம் கேட்ட விசயம் வெட்ட வெளிச்சமானது. இது தொடர்பாக  அதிகாரிகள் கலெக்டர் ஹரிகரனுக்கு ‘ரிப்போர்ட்’ அனுப்ப,  கார் டிரைவர் வரதனை  இடமாற்றம் செய்ய்ய கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி: எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்