Published:Updated:

மலைப்பகுதியில் ரோப் கார் விபத்து; 2 பேர் பலி,10-க்கும் மேற்பட்டோர் காயம் - மீட்புப் பணிகள் தீவிரம்

திரிகுட் மலை ரோப் கார் ( ட்விட்டர் )

இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப் கார் வே-யான திரிகுட்டில் நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.

மலைப்பகுதியில் ரோப் கார் விபத்து; 2 பேர் பலி,10-க்கும் மேற்பட்டோர் காயம் - மீட்புப் பணிகள் தீவிரம்

இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப் கார் வே-யான திரிகுட்டில் நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.

Published:Updated:
திரிகுட் மலை ரோப் கார் ( ட்விட்டர் )

ஜார்க்கண்ட் மாநிலத்தின், தியோகர் மாவட்டத்திலுள்ள திரிகுட் மலைப்பகுதியில் `ரோப்-வே' கேபிள் கார்கள் இயக்கப்படுகிறன. இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப் கார் வே-யான திரிகுட்டில் நேற்றைய தினம் எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.

நேற்றைய தினம் ரோப் கார்கள் வழக்கம்போல இயக்கப்பட்டுவந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு ரோப் கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த இரண்டு ரோப் கார்களில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் மருத்துவமனை சிகிச்சையின்போதும் உயிரிழந்தனர். மேலும், இதன் காரணமாக அந்த ரோப் வே-யில் இருந்த அனைத்து ரோப் கார்களில் இருந்தவர்களும் விபத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துந்துள்ள நிலையில், 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் 45 பேர் வரை சிக்கியிருக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்
ட்விட்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், இந்த விபத்துச் சம்பவத்துக்குப் பிறகு அங்கு பணியிலிருந்த மற்ற ஊழியர்களும், ரோப் கார் மேலாளரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானப்படை மற்றும் தேசிய மீட்புப் படைகள் இந்திய ராணுவத்தின் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பாக  தியோகர் துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி, ``நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இருக்கிறது. ரோப் வேயில் உள்ள கேபிள் கார்களில் இன்னும் சிலர் சிக்கியுள்ளனர். மேலும், அவர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். அனைத்து சுற்றுலாப்பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார்கள். அதேநேரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism