Published:Updated:

`அதிகாலையில் வெடித்துச் சிதறிய ஏ.சி' -ஜோலார்பேட்டையில் மனைவி, போலீஸ்காரருக்கு நேர்ந்த துயரம்

உயிரிழந்த சண்முகம்
News
உயிரிழந்த சண்முகம்

படுக்கை அறையில் ஏ.சி வெடித்துச் சிதறிய சம்பவத்தில், போலீஸ்காரரும் அவரின் கர்ப்பிணி மனைவியும் உயிரிழந்தது ஜோலார்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் (40). இவர், செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்புப் படையில் போலீஸாகப் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி வெற்றிச்செல்வி (30), மகள் சௌமியா (9). தற்போது, வெற்றிச்செல்வி 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார்.

சண்முகம்
சண்முகம்

நேற்று முன்தினம் இரவு சண்முகம் தன் மனைவி, மகளுடன் சாப்பிட்டுவிட்டு படுக்கை அறையில் தூங்கச் சென்றார். நேற்று அதிகாலை 2 மணியளவில் மகள் சௌமியா, கழிவறைக்குக் கூட்டிச் செல்வதற்காக வெற்றிச்செல்வியை எழுப்பினார். இரண்டு பேரும் கழிவறைக்குச் சென்றபோது, சண்முகம் நல்ல உறக்கத்தில் இருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது, படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கழிவறையில் இருந்த வெற்றிச்செல்வி அதிர்ச்சியடைந்து மகளைக் கழிவறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு ஓடிவந்தார். அங்கு உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் கதறினார் சண்முகம். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மனைவி வெற்றிச்செல்வி ஈடுபட்டார்.

அப்போது, அவருடைய உடலிலும் தீப்பற்றியது. இருவரின் அலறல் சத்தத்தையும் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர். மின்சாரம் தடைபட்டு அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. உடல் கருகிய நிலையில் தீக்காயங்களுடன் கிடந்த சண்முகத்தையும் அவரின் மனைவி வெற்றிச்செல்வியையும் மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று மதியம் சண்முகம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து வெற்றிச்செல்வியும் உயிரிழந்துவிட்டார். சம்பவம் நேர்ந்தபோது தாய் சாதுர்யமாகச் செயல்பட்ட காரணத்தால் மகள் சௌமியா காப்பாற்றப்பட்டாள்.

எனினும், தாய்-தந்தையைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் சௌமியா தவித்துவருகிறார். இந்தச் சம்பவம் உறவினர்களிடமும் ஜோலார்பேட்டை மக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.சி வெடித்ததற்கான காரணம் குறித்து ஜோலார்பேட்டை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.