Published:Updated:

ஏர்-ஷோவின் போது நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்! - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி

நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்

அமெரிக்காவில் ஏர்-ஷோவின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு வீடியோ வெளியாகியிருக்கிறது.

ஏர்-ஷோவின் போது நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்! - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி

அமெரிக்காவில் ஏர்-ஷோவின் போது இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு வீடியோ வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்

அமெரிக்காவின் டெக்சாஸின் டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில், விமானப்படை விங்ஸ் ஓவர் டல்லாஸ் நினைவாக நேற்று ஏர்-ஷோ நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு விமானங்கள் காட்சிக்கு உட்படுத்தப்பட்டன. இந்த விமான ஏர்-ஷோவுக்கு ஏராளமான மக்கள் வந்து பார்வையிட்டனர்.

இந்த நிலையில், கண்காட்சியின்போது, ஒரு போயிங் பி -17 குண்டுவீச்சு விமானமும், ஒரு சிறிய ரக விமானம் நடுவானில் மோதிக்கொண்டு தரையில் விழுந்து தீப்பிடித்தன. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 6 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், இரண்டு விமானங்களிலும் இருந்த விமானிகளின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தகவல் தெரிவித்திருக்கிறது.

இரண்டு விமானங்களும் மோதிக்கொள்ளும் பரபரப்பு காட்சி அங்கிருந்த பார்வையாளர்களால் வீடியோவாக படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விபத்து தொடர்பாக FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றன.

பி-17-ன் விமானம் கடந்த அக்டோபர் 2, 2019 அன்று கனெக்டிகட்டின் வின்ட்சர் லாக்ஸில் உள்ள விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. அதில் ஏழு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.