Published:Updated:

ராமநாதபுரம்: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் உயிரிழப்பு!

கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி

கடலில் சுமார் நான்கு நாட்டிகள் மைல் தொலைவில் உள்ள இடமுருகை தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்ரோஷமான கடல் அலையில் சிக்கி இவர்களின் நாட்டுப்படகு கவிழ்ந்துள்ளது.

ராமநாதபுரம்: நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் உயிரிழப்பு!

கடலில் சுமார் நான்கு நாட்டிகள் மைல் தொலைவில் உள்ள இடமுருகை தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்ரோஷமான கடல் அலையில் சிக்கி இவர்களின் நாட்டுப்படகு கவிழ்ந்துள்ளது.

Published:Updated:
கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே மங்களேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர்கள் மலைச்செல்வம், முனியசாமி, அருண்குமார், காசிசுமன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நான்கு மீனவர்களும் நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் சுமார் நான்கு நாட்டிகள் மைல் தொலைவில் உள்ள இடமுருகை தீவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆக்ரோஷமான கடல் அலையில் சிக்கி இவர்களின் நாட்டுப்படகு கவிழ்ந்துள்ளது. இதில் நான்கு பேரும் நீரில் மூழ்கினர். அருண்குமார், காசிசுமன் இருவர் மட்டும் கவிழ்ந்த நாட்டுப்படகின் மீது ஏறி அமர்ந்து உயிர்தப்பினர். மலைச்செல்வம், முனியசாமி இருவரும் கடல் அலைகளில் சிக்கி மாயமானார்கள். அலைகள் குறைந்ததைத் தொடர்ந்து கடலில் மாயமான இருவரையும் உயிர்தப்பிய இருவரும் நீண்டநேரமாக தேடியிருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கதறி அழும் மீனவர்களின் குடும்பத்தினர்
கதறி அழும் மீனவர்களின் குடும்பத்தினர்

அப்போது அந்த வழியாக மீன்பிடிக்க வந்த விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு கவிழ்ந்த நிலையில் இருவர் மட்டும் படகை சுற்றி நீச்சல் அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் சென்று அவர்களை மீட்டனர்.

இதையடுத்து அவர்களை கரைக்குக் கொண்டுவந்து சேர்த்த நிலையில், கடலோர காவல் படை போலீஸார் உதவியுடன் மாயமான இருவரையும் தேடும்பணி இரவு முழுவதும் நீடித்தது. கடற்கரையில் விடிய விடிய மாயமான மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க காத்துக் கிடந்தனர்.

உயிரிழந்த மீனவர்கள் மலைச்செல்வம் , முனியசாமி
உயிரிழந்த மீனவர்கள் மலைச்செல்வம் , முனியசாமி

இந்நிலையில் இன்று காலை மலைச்செல்வத்தின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து போலீஸார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். மாயமான முனியசாமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பின்னர் ஒரு மணி நேரத்தில் அவரின் உடலும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் மீனவ மக்களிடையையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.