Published:Updated:

மும்பை: பிக்னிக் சென்றுவிட்டு திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து - 2 மாணவர்கள் பலி; 48 பேர் காயம்

கவிழ்ந்த பஸ்
News
கவிழ்ந்த பஸ்

மும்பை அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் காயமடைந்தனர். மேலும் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை: பிக்னிக் சென்றுவிட்டு திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து - 2 மாணவர்கள் பலி; 48 பேர் காயம்

மும்பை அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் காயமடைந்தனர். மேலும் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கவிழ்ந்த பஸ்
News
கவிழ்ந்த பஸ்

மும்பை செம்பூரைச் சேர்ந்த மாயக் கோச்சிங் கிளாஸில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 48 பேர் புனே அருகிலுள்ள லோனவாலாவில் இருக்கும் வாட்டர் பார்க் ஒன்றுக்கு பிக்னிக் சென்றனர். அந்த மாணவர்கள் நேற்று காலையில் பிக்னிக் சென்றுவிட்டு, மாலையில் மும்பைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் இரவு 8 மணிக்கு, கொபொலி மலைப்பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. சாலையின் மறுவழித்தடத்தில் பஸ் விழுந்ததில் உள்ளே இருந்த மாணவர்கள் 48 பேர் உட்பட 58 பேரும் உதவி கேட்டு கூச்சலிட்டனர். விபத்து குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் ஹிருத்திகா, ராஜ் மாத்ரே ஆகிய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

இது தவிர மாணவர்கள் உட்பட 48 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி மாயக் பவார் கூறுகையில், ``விபத்தில் சிக்கிய மாணவர்களிடம் வாக்குமூலம் வாங்கவிருக்கிறோம். எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது. விபத்துக்குக் காரணமான டிரைவர்மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இந்த விபத்தால் மும்பை-புனே நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. நெடுஞ்சாலைப் பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு ஒரு மணி நேரத்தில் போக்குவரத்தைச் சரிசெய்தனர். காயமடைந்த மாணவர்கள் அனைவரும் நவிமும்பை காமோட்டே மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டனர். கொபொலி மலைப்பகுதி அதிக வளைவுகளைக்கொண்டது. இதில் வாகனங்கள் மிகவும் குறைவான வேகத்தில் செல்வது வழக்கம்.