Published:Updated:

24 மணிநேரத்தில் மாநகரப் பேருந்து மோதி 2 பேர் பலி! - வடபழனி போக்குவரத்து மாற்றம் காரணமா?

இரண்டு பேர் அடுத்தடுத்து மாநகரப் பேருந்துகளால் பலியாகியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகரப் பேருந்து
மாநகரப் பேருந்து

நேற்றிரவு 8 மணி அளவில் சென்னை வடபழனியில் பெண் ஒருவர் மீது மாநகரப் பேருந்து மோதியது. இதில், படுகாயத்துடன் மருத்தவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை விருகம்பாக்கம் பச்சையப்பன் கோயில் தெருவைச் சேரந்தவர் கதிரேசன் (55). இவரது மனைவி மீனா(50). நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து ஏற, வடபழனி பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார் மீனா. அப்போது, அவ்வழியாக வந்த மாநகரப் பேருந்து, வடபழனி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த போது, நடந்து சென்ற மீனா மீது மோதியுள்ளது.

மீனா
மீனா

இதில், அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள், மீனாவை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்துள்ளார். வடபழனியில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார் மீனா. அவரின் இழப்பு குடும்பத்தினருக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிசி பிரிவு 279, 304 A உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்த 24 மணிநேரத்துக்குள் சென்னையில், மாநகரப் பேருந்தால் அடுத்த உயிரிழப்பும் நடந்திருப்பது பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

`11 பேர் உயிரை இழந்தனர்'- ஆந்திராவை சோகத்தில் மூழ்கடித்த படகு விபத்து!

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பூ வியாபாரம் செய்யும் கலைச்செல்வி. இவர் வழக்கம் போல் பூ வியாபாரத்திற்காக பூக்கள் வாங்க கோயம்பேடு மார்கெட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த கலைச்செல்வி, தனது வாகனத்தில் வடபழனி துரைசாமி சாலையில் சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தடம் எண் 12B பேருந்து தீடீரென அவர் மீது மோதியது, இதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்து
பேருந்து

விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்து மற்றும் ஓட்டுநரையும் பொதுமக்கள் கிண்டி போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடபழனி துரைசாமி சாலையில் திடீரென்று போக்குவரத்து மாற்றம் செய்து சாலையில் பேருந்து திருப்பிவிட்டதன் காரணமாக அதிக அளவில் அப்பகுதியில் விபத்து ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வடபழனி பகுதியில் அடுத்தடுத்து மாநகரப் பேருந்து மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.