Published:Updated:

விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற சிறுவர்கள்; சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!- திருவள்ளூரில் சோகம்

உயிரிழந்த சிறுவர்கள்!
உயிரிழந்த சிறுவர்கள்!

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்கச் சென்றபோது, தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை தீயணைத்துறையினர் ஆறு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் சடலங்களாக மீட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், செவாய்ப்பேட்டையை அடுத்த சிறுகடல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மகன் ஷ்யாம் விக்னேஷ் (13). செவ்வாய்ப்பேட்டை அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவரின் மகன் மோனிஷ் (12). செவாய்ப்பேட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்துவந்தார். நண்பர்களான விக்னேஷும் மோனிஷும் நேற்றைய தினம் தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளைக் கரைக்கப் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் செல்லும் கிருஷ்ணா இணைப்பு கால்வாய்க்குச் சென்றிருக்கின்றனர். விநாயகர் சிலைகளைத் தூக்கி வீசாமல், சிறுவர்கள் இறங்கிக் கரைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கால்வாய்ல் கரையிலிருந்து தவறி விழுந்த சிறுவர்கள் இருவரும் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கிருஷ்ணா கால்வாய்
கிருஷ்ணா கால்வாய்

சிறுவர்கள் கால்வாயில் விழுந்து கத்திக் கூச்சலிட்டதைக் கண்டு அருகிலிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், கால்வாயில் தண்ணீரின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், சிறுவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது. அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்பு கால்வாயில் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறி உடனடியாக நிறுத்திவிட்டு சிறுவர்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள்.

குளத்தில் மூழ்கிய குழந்தைகள்; துயரத்தில் தந்தையும் தற்கொலை! - மனதை உலுக்கும் கடைசிப் புகைப்படங்கள்

இந்தநிலையில், தீயணைப்புத்துறையினர் சுமார் ஆறு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இரு சிறுவர்களையும் சிறுகடல் பகுதியிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் சடலமாக மீட்டனர். அவர்களிடமிருந்து சடலங்களைக் கைப்பற்றிய செவ்வாய்ப்பேட்டை போலீஸார் பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முன்னதாக, கிருஷ்ணா கால்வாயில் கடந்த வாரம் ஒரு சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது ஒரே பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு