Published:Updated:

திருச்சியில் சரக்கு ரயில் கவிழ்ந்தது: போக்குவரத்து பாதிப்பு!

திருச்சியில் சரக்கு ரயில் கவிழ்ந்தது: போக்குவரத்து பாதிப்பு!
திருச்சியில் சரக்கு ரயில் கவிழ்ந்தது: போக்குவரத்து பாதிப்பு!

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேசன் அருகே  சரக்கு ரயில் கவிழ்ந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் சரக்கு ரயில் கவிழ்ந்தது: போக்குவரத்து பாதிப்பு!

திருச்சி, டால்மியா சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிய சரக்கு ரயில் கேரளா மாநிலம் ஆளவாய்க்கு சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயில் இன்று காலை 10.15 மணியளவில் திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேசன் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கவிழ்ந்தது.

##~~##
இந்த விபத்தில் ரயிலின் முன் பக்க பெட்டிகள் மூன்று தடம்புரண்டு கவிழ்ந்ததால் ஏராளமான சிமெண்ட் மூட்டைகள் சேதமடைந்தன. ரயில் தடம் புரண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருச்சி கோட்ட ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர்.
சரக்கு ரயில் தடம் புரண்டதால், வந்த வழியில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சி.ஆனந்தகுமார்

படம்: தே. தீட்ஷித்