Published:Updated:

`நேருக்கு நேர் மோதிய ட்ரக்குகள்; 23 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி!’ -ஊரடங்கில் தொடரும் சோகம்

விபத்து
விபத்து

இந்த கோர விபத்தில் 23 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடந்த சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. வருமானமின்றி, உணவின்றி சொந்த ஊருக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளின்றி, நடந்தே செல்லும் முடிவுக்கு வந்தனர். நாடுமுழுவதும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்படி நடந்து கொண்டே இருக்கிறார்கள். வழியில் கிடைக்கும் வண்டியில் ஏறியும் பயணமாகிறார்கள்.

விபத்து
விபத்து

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி வந்த லாரியில் புலம்பெயர்த் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் அவ்ராயா (Auraiya) என்னும் பகுதியில் இந்த லாரி எதிரே வந்த மற்றொரு லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 23 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடந்த சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3.30 மணி அளவில் நடந்ததாகவும் லாரியில் பயணித்த அவர்கள் பெரும்பாலும் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா ரயில் விபத்து -புலம்பெயர் தொழிலாளர்கள் பலி
மகாராஷ்டிரா ரயில் விபத்து -புலம்பெயர் தொழிலாளர்கள் பலி
Twitter

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சொந்த மாநிலமான மத்தியப்பிரதேசத்துக்குச் செல்ல முயன்ற தொழிலாளர்கள் நீண்ட தூரம் நடந்ததால், தண்டவாளத்தில் அசதியில் தூங்க, ரயில் விபத்தில் சிக்கினார்கள். அந்த விபத்தில் 17 பேர் பலியாகினர். இந்த நிலையில் தற்போது லாரி விபத்தில் 23 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`களைப்பால் தண்டவாளத்தில் தூக்கம்’ -14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரைப் பறித்த காலி சரக்கு ரயில்
அடுத்த கட்டுரைக்கு