Published:Updated:

சிறுவனை துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டருக்கு குழந்தைகள் நலக் குழு சம்மன்!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  இன்ஸ்பெக்டருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. 

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில், கோயில் உண்டியல் உடைக்கப்பட்டது தொடர்பாக நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில், கடந்த மாதம் 7ஆம் தேதி அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் அன்சாரியை அழைத்து வந்து, இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது, துப்பாக்கியை சிறுவனின் வாயில் வைத்து மிரட்டியபோது துப்பாக்கியின் பட்டனில் இன்ஸ்பெக்டர் விரல்பட்டு சிறுவனின் தொண்டையில் குண்டு பாய்ந்துள்ளது.

##~~##
உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது வீடு திரும்பியுள்ள சிறுவன் பேச முடியாத நிலையில் இருக்கிறான்.
இந்நிலையில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், வரும் 14ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.