Published:Updated:

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; 25 பேர் பலி- திருமணத்துக்குச் சென்றபோது நேர்ந்த சோகம்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 25 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; 25 பேர் பலி- திருமணத்துக்குச் சென்றபோது நேர்ந்த சோகம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 25 பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து

உத்தரகாண்ட் மாநிலம், பவுரி கர்வால் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நபர்களுடன் பேருந்து ஒன்று திருமணத்துக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறது. சிம்டி எனும் கிராமத்துக்கு அருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறது. பேருந்தில் சிக்கியவர்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்திருக்கிறார்கள்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தொடங்கினர். விபத்தில் சிக்கியவர்களில் 25 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீட்கபட்டவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்த விபத்து தொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு துணை நிற்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.