Published:Updated:

பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ விபத்து: ஒரு சிறுமி பலி; 15 குழந்தைகள் காயம்!

Vikatan Correspondent
பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ விபத்து: ஒரு சிறுமி பலி; 15 குழந்தைகள் காயம்!
பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ விபத்து: ஒரு சிறுமி பலி; 15 குழந்தைகள் காயம்!

நெல்லை: நெல்லையில் அளவுக்கு அதிகமாக சிறுவர்களை பள்ளிக்கு ஏற்றி சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியதில், ஒரு சிறுமி உயிரிழந்தார். மேலும் 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ விபத்து: ஒரு சிறுமி பலி; 15 குழந்தைகள் காயம்!

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள், தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். முகாமில் உள்ள குழந்தைகள், மணிகண்டன் என்பவரின் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இன்று, ஒரே ஆட்டோவில் டிரைவர் மணிகண்டன் உட்பட 17 குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.

நான்கு வழிச் சாலையில், ஒன்வே வழியாக ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ஜே.சி.பி. வாகனத்தில் ஆட்டோ மோதி கட்டுப்பாட்டை இழந்து உருண்டுள்ளது. விபத்து நடந்த பகுதி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் உடனடியாக உதவிக்கு யாரும் வராததால் குழந்தைகள் பரிதவித்துள்ளனர்.

பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ விபத்து: ஒரு சிறுமி பலி; 15 குழந்தைகள் காயம்!

சிறிது நேரத்திற்கு பின் அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்தை பார்த்துவிட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் தான் குழந்தைகள் மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்தில் 5 ஆம் வகுப்பு படிக்கும் சசிகலா என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும், ஜெயகிருஷ்ணன், விஸ்வா, நிஷாந்தினி, திலிப்குமார் உள்ளிட்ட 15 குழந்தைகள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு கட்டுப்பாடு விதித்தும், ஆட்டோக்களில் அதிக அளவில் குழந்தைகளை ஏற்றி சென்றது இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதை அரசு உடனே கண்கானித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

ஆண்டனிராஜ்