Published:Updated:

தானே அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

விகடன் விமர்சனக்குழு
தானே அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!
தானே அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!
தானே அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே ரசாயன தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரை அடுத்த பிவாண்டி என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கடுமையான புகைமூட்டமும் உருவானதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். ரசாயனப் பொருட்கள் முற்றிலும் எரிந்து முடிந்த பின்பே, தீயை அணைக்க முடியும் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றியும், விபத்துக்கான காரணம் குறித்தும் உடனடியாக தகவல் தெரியவரவில்லை.