Published:Updated:

டெல்லியில் சாலை விபத்து: ஆர்.எஸ்.எஸ். தலைவர் உயிர் தப்பினார்!

Vikatan Correspondent
டெல்லியில் சாலை விபத்து: ஆர்.எஸ்.எஸ். தலைவர் உயிர் தப்பினார்!
டெல்லியில் சாலை விபத்து: ஆர்.எஸ்.எஸ். தலைவர் உயிர் தப்பினார்!
டெல்லியில் சாலை விபத்து: ஆர்.எஸ்.எஸ். தலைவர் உயிர் தப்பினார்!

புதுடெல்லி: டெல்லியில் நடந்த சாலை விபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்  அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இன்று காலை (4ஆம் தேதி) காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் டெல்லி, பரேடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரது காருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரியின் கார் மீது   இன்னொரு கார் மோதியது. இந்த விபத்தில் மோகன் பகவத் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கார் மீது மோதிய காரின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே டெல்லியில் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், இந்த விபத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.