Published:Updated:

கட்டட விபத்தில் பலியான ஒடிசா குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம்: நவீன் பட்நாயக் அறிவிப்பு!

விகடன் விமர்சனக்குழு

புவனேஸ்வர்: சென்னை கட்டட விபத்தில் பலியான ஒடிசா குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் 4 பேரும் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேருடைய குடும்பத்தினருக்கும், அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கருணைத் தொகையாக தலா ரூ.5 லட்சத்தை அறிவித்து உள்ளார். இதேபோல், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒடிசா மாநில தொழிலாளர் துறை செயலாளரை, தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளுமாறும் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.