Published:Updated:

நடுரோட்டில் வெடித்துச் சிதறிய பட்டாசு வேன்... சிதைந்த உடல்கள்!- செஞ்சியைப் பதற வைத்த விபத்து

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே பட்டாசு ஏற்றி வந்த வேனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Crackers Accident
Crackers Accident

புதுச்சேரியிலிருந்து விற்பனைக்காக பட்டாசுகளை ஏற்றிய மினி லாரி இன்று காலை செஞ்சி, திருவண்ணாமலைப் பகுதிகளில் உள்ள பட்டாசுக் கடைகளில் அவற்றை டெலிவரி செய்வதற்காக சென்றுகொண்டிருந்தது. செஞ்சி அருகே இருக்கும் நங்கிலிகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது மினி வேனின் இன்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்காக டிரைவரும் கிளீனரும் இன்ஜின் மேல் இருந்த பேனட்டைத் திறந்து பார்த்தனர்.

Crackers blast
Crackers blast

அதிலிருந்து அதிகமாக வெளியேறிய புகையை சரி செய்வதற்காக அங்கிருந்த பாஷா என்பவரது டீக்கடையிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து இன்ஜினில் ஊற்றினர். அப்போது, வண்டியில் என்ன இருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் கேட்டதற்கு, `பட்டாசு' என்று டிரைவரும் கிளீனரும் கூறியிருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், `வண்டியை உடனே வேறு இடத்தில் நிறுத்துங்கள்' எனக் கூச்சலிட்டனர்.

Fire Accident
Fire Accident

அப்போது 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அங்கு பேருந்து வந்துள்ளது. அப்போது, வேனில் பட்டாசு இருப்பது தெரிந்ததும் உடனே அங்கிருந்து வேகமாக நகர்த்தினார் பஸ் ஓட்டுநர். உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் வேனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில் வாகனத்தின் அருகே நின்றிருந்த டிரைவர் மற்றும் கிளீனர் மற்றும் அடையாளம் தெரியாதவர் என மூன்று பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

Accident
Accident

அதேபோல பட்டாசு ஏற்றிவந்த அந்த வாகனமும் உருத்தெரியாத அளவுக்குச் சின்னாபின்னமானது. பயணிகளுடன் இருந்த டவுன் பேருந்தின் பின் பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பட்டாசு விபத்து
பட்டாசு விபத்து

அதேபோல அந்தப் பகுதியிலிருந்த விஜயன் என்பவருக்குச் சொந்தமான 5 கடைகளைக் கொண்ட கட்டடம் முழுவதும் இந்த விபத்தால் இடிந்து சேதமடைந்ததோடு கடைகளில் இருந்த பொருள்களும் கருகி காற்றில் பறந்தன. பட்டாசு ஏற்றிவந்த வேனின் உதிரிபாகங்கள் அருகிலிருந்த வீடுகளின் கூரை மீது கிடந்தன. அதேபோல இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நல்லிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் படுகாயமடைந்தார்.

Crackers
Crackers
T.Silambarasan

அதேபோல டீக்கடை மாஸ்டர் பாஷா, அவரின் மனைவி பாஷா பீவி உள்ளிட்ட 10 பேர் படுகாயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தக் கோர விபத்தில் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.