Published:Updated:

விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்து; 3 பேர் உயிரிழப்பு! - தொடர் விபத்தால் சோகத்தில் தொழிலாளர்கள்

பட்டாசு ஆலை விபத்து
News
பட்டாசு ஆலை விபத்து

விருதுநகரில் பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஓர் அறை இடிந்து தரைமட்டமானது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் விஜயகுலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான சோலை பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இங்கு நாக்பூர் உரிமம் பெற்று ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தனர்.

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி, அவரின் உறவினர் செந்தில்குமார் ஆகியோர் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அத்துடன், வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் ஏழு பேர் காயமடைந்தனர். வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூரிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, கட்டட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கோவில்பட்டி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இடிந்து தரைமட்டமான அறைகள்
இடிந்து தரைமட்டமான அறைகள்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேரில் செந்தில்குமார், கருப்பசாமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு பேரில் காசி உயிரிழந்தார். ஆக மொத்தம், மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 1-ம் தேதி களத்தூர் அருகிலுள்ள நாகலாபுரத்தில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வழிவிடு முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஃபேன்ஸி ரகப் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஆறு அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை
விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை

அதில், நான்கு பேர் உயிரிழந்தனர், எட்டுப் பேர் காயமடைந்தனர். புத்தாண்டு நாளில் நடந்த இந்த வெடி விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்த மூன்று நாள்களில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.