Published:Updated:

`பழுதான காரை மீட்க வந்த ரெகவரி வேன்!' -செங்கோட்டை பேருந்தால் கேரளப் பயணிகளுக்கு நேர்ந்த துயரம்

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

கேரளாவைச் சேர்ந்த சிலர் சொகுசு காரில் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியபோது கார் பழுதடைந்தது. அப்போது உதவிக்கு வந்த ரெகவரி வேன் மற்றும் கார் மீது பேருந்து மோதியது.

கேரளாவைச் சேர்ந்த சிலர் சொகுசுக் காரில் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றுவிட்டு திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த கார், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் லேசாக மோதியதால் பழுதடைந்தது. 

விபத்தில் சிக்கிய கார் மற்றும் ரெகவரி வேன்
விபத்தில் சிக்கிய கார் மற்றும் ரெகவரி வேன்

அதனால் அந்தக் காரில் இருந்தவர்களை மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு காரைப் பழுது பார்க்கும் பணி நடந்தது. ஆனால், காரைச் சரிசெய்ய இயலாததால் ரெகவரி வேன் மூலம் எடுத்துச் செல்ல முடிவு செய்தனர். அதன்படி ரெகவரி வேன் வரவழைக்கப்பட்டு அதில் காரை கட்டி இழுக்கத் தயாரானார்கள்.

நடுரோட்டில் வெடித்துச் சிதறிய பட்டாசு வேன்... சிதைந்த உடல்கள்!- செஞ்சியைப் பதற வைத்த விபத்து

சாலையோரம் இருந்த காரை இழுத்துச் செல்ல முயன்றபோது சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து திடீரென மோதியது. அப்போது ரெகவரி வேனில் இருந்த டிரைவர் உள்ளிட்ட மூவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உயிரிழந்தோரின் உடல்
உயிரிழந்தோரின் உடல்

இந்த விபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சிஞ்சு, அடையாளம் தெரியாத மற்றொருவர், ரெகவரி வேன் டிரைவரான சிவகாசியைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் பழுதடைந்த காரைச் சரிசெய்ய முயன்றபோது மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு