Published:Updated:

விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்த பெற்றோர்- 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

குழந்தை மரணம்

படிக்கட்டுக்கு இடைப்பட்ட இடைவெளியில் பாதுகாப்புக் கண்ணாடி அல்லது வலை அமைக்காமல் இருந்ததால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாக அவினாஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்த பெற்றோர்- 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

படிக்கட்டுக்கு இடைப்பட்ட இடைவெளியில் பாதுகாப்புக் கண்ணாடி அல்லது வலை அமைக்காமல் இருந்ததால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாக அவினாஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
குழந்தை மரணம்

மும்பையின் தென்பகுதியிலுள்ள வான்கடே ஸ்டேடியத்துக்கு அருகில் கார்வாரே கிளப் இருக்கிறது. இந்த கிளப்பில் துணைத் தலைவராக இருக்கும் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ராஜ்புரோஹித் கிளப் உறுப்பினர்களுக்காக கிளப்பின் மாடியில் அகண்ட திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண ஏற்பாடு செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

இரவில் அனைவரும் விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டிருந்தனர். அவினாஷ் ரத்தோட் என்பவர் தன்னுடைய மகனுடன் விளையாட்டுப் போட்டியை பார்க்க வந்திருந்தார். போட்டி நடந்து கொண்டிருந்தபோது அவினாஷின் 3 வயது மகன் ரித்யாஷ் மற்றொரு 10 வயது சிறுவனுடன் 5-வது மாடியில் இருக்கும் வாஷ் ரூமுக்குச் சென்றார். வாஷ் ரூமுக்குச் சென்றுவிட்டு திரும்ப வரும்போது படிக்கட்டின் ஓரத்தில் தடுப்பு இல்லாமல் இருந்தது. 3 வயது சிறுவன் ரித்யாஷ் படிக்கட்டில் தவறி இடைவெளி வழியாக கவிழ்ந்து விழுந்துவிட்டான். உடனே அவனுடன் இருந்த 10 வயது சிறுவன் ஓடி வந்து நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார். 3 வயது சிறுவன் படிக்கட்டில்தான் தவறி விழுந்தான் என்று நினைத்து அவினாஷ் வந்திருக்கிறார்.

தவறி விழுந்த இடம்
தவறி விழுந்த இடம்

ஆனால் அவன் அங்கு இல்லை. இதையடுத்து கீழே சென்று பார்த்த போது ரித்யாஷ் கீழே தவறி விழுந்துவிட்டதாக வாட்ச்மேன் தெரிவித்தார். உடனே ரித்யாஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் பல மணி நேர சிகிச்சைக்குப் பிறகு ரித்யாஷ் உயிரிழந்துவிட்டான்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். படிக்கட்டுக்கு இடைப்பட்ட இடைவெளியில் பாதுகாப்பு கண்ணாடி அல்லது வலை அமைக்காமல் இருந்ததால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாக அவினாஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். அதோடு கிளப் நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டதாக வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பா.ஜ.க தலைவர் ராஜ்புரோஹித் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.