Published:Updated:

தனியார் ஜவுளிக்கடை பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து!

விகடன் விமர்சனக்குழு
தனியார் ஜவுளிக்கடை பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து!
தனியார் ஜவுளிக்கடை பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து!
தனியார் ஜவுளிக்கடை பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து!

சென்னை: தி.நகர் ரங்கநாதன் தெருவில், தனியார் ஜவுளிக்கடைக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

தனியார் ஜவுளிக்கடைக்கு சொந்தமான அந்த வணிக வளாக கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று அதிகாலை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த தளத்தில் 8 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் பலத்த காயமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து 17 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் சென்னை மாநகராட்சியின் 5 தண்ணீர் லாரிகளும் ஈடுபட்டன.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தீ விபத்தில், அந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.