Published:Updated:

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 35 பேர் உயிரிழப்பு!

கலிலுல்லா.ச

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மினி பேருந்தில் கவிழ்ந்து விபதுக்குள்ளானதில், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து
விபத்து

காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள கிஷ்வான் என்ற இடத்தில் மினி பஸ் ஒன்று அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றது. விதிகளுக்குப் புறம்பாக பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 35 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து
விபத்து

கிஷ்வார் எஸ்.பி சக்தி பதாக் பேசுகையில், ``அந்தச் சாலை மோசமான நிலையில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பேருந்தில் பயணிகள் கூட்டமும் அதிகமாகவே இருந்துள்ளது. இதைச் சமாளிக்க முடியாமல் பேருந்து ஓட்டுநர் திணறியுள்ளார். அங்கிருந்த வளைவு ஒன்றில் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது, பேருந்து கட்டுபாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திலே 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

``ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்துள்ள விபத்து மனதை துளைக்கும் வகையில் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.