Published:Updated:

டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: பலி 12 ஆக அதிகரிப்பு

Vikatan Correspondent

புதுடெல்லி, செப்.8,2011

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை வியாழக்கிழமை 12 ஆக அதிகரித்தது. ##~~##

ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க நபரின் உயிர் இன்று காலை பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் வாயில் எண் 4 மற்றும் 5-க்கு இடையே புதன்கிழமை காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 75 பேர் காயமடைந்தனர்.