Published:Updated:

'ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமம்!'

'ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமம்!'
'ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமம்!'

திருச்சி: ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமமானது. எனவே, இதற்கு பொறுப்பேற்று சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ரெங்கராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் விநியோகம் என்பது மிக கடுமையாக இருக்கின்றது. பண விநியோகத்தில் தேர்தல் கமிஷன் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் ஒழிய, இந்த தேர்தல் என்பது மீண்டும் பணம் வெற்றிப்பெறக்கூடிய தேர்தலாக மாறிவிடும். தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கின்றது. தேர்தல் கமிஷன் சுயேட்சையாக இயங்கும் என்று நம்புகிறோம். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் சுயேட்சையாக இயங்குவார்கள் என்றும் நம்புகிறோம்.

'ராணிப்பேட்டை தொழிற்சாலை விபத்து கொலைக்கு சமம்!'

ராணிபேட்டை தொழிற்சாலையில், குரோமிய அலுமினியம், சோடியம், அமோனியா சல்பரிக் ஆசிட், மற்றும் தோல் கழிவுகளுக்கான டேங்குகள் அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும், 20 அடிகள் உயர்த்தி கட்டபட்ட தொட்டியால் இரவு விபத்து ஏற்பட்டிருக்கிறது. இறந்தவுடன் நஷ்டஈடு கொடுப்பது என்பதில் இல்லை பிரச்னை. இந்த விபத்து என்பது கொலைக்கு சமம். இதற்கு பொறுப்பேற்று சம்மந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இதேபோல், தமிழ்நாட்டில் எந்தவொரு தொழிற்சாலையிலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் உருவாகி உள்ளது. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. நேற்று ஸ்ரீரங்கத்தில் வீட்டிற்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆக தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு என்பது சீர்கெட்டிருக்கிறது. கூலிபடைகள், கௌரவ கொலைகள், கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளது. இவையெல்லாம் மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரும் 16 முதல் 19ம் தேதி வரை கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பொருளாதாரம், வேலையில்லா திண்டாட்டம், தொழில் ஏற்படக்கூடிய விபத்து குறித்து விவாதிப்பதோடு மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களை புதிய உத்வேகத்துடன் சந்திப்பது என்று முடிவெடுத்து இருக்கின்றோம்.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளை பார்த்து மக்கள் சலித்துப்போய் உள்ளனர். ஆகவே நேர்மையான நியாயமான மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். எனவே அதை நோக்கி எங்கள் கட்சி செயல்படும். எங்களது வேட்பாளர் அண்ணாதுரையின் சுற்றுப்பயணம் என்பது பயன்படும். கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்'' என்றார்.

சி.ஆனந்தகுமார்