Published:Updated:

சித்தேரி விபத்துக்கு காரணம் என்ன? - சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

சித்தேரி விபத்துக்கு காரணம் என்ன? - சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

சென்னை, செப்.14,2011

விரைவு மின்சார ரயில் அதிவேகத்தில் சென்றதாலேயே ரயில் விபத்து ஏற்பட்டது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்தார். ##~~##

அரக்கோணம் அருகே சித்தேரியில் நிகழ்ந்த ரயில் விபத்தை நேரில் பார்வையிடுவதற்காக இன்று சென்னை வந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறுகையில், "சித்தேரியில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து புறப்பட்ட விரைவு மின்சார ரயில் அதிவேகத்தில் சென்றதாலேயே சித்தேரியில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்றார்.

ஓட்டுநர் மது அருந்தியிருந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என வெளியான செய்திகளை மறுத்த அவர், "இந்த விபத்து நடந்தபோது அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்றார்.

அதேவேளையில், "சித்தேரி சிக்னலில் நின்றுகொண்டிருந்த ரயிலைப் பார்த்தும், ஓட்டுநர் பிரேக் பிடிக்காதது புதிராகவே இருக்கிறது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது," என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு