Published:Updated:

பெரம்பலூர்: வெடித்த டயர்; கட்டுப்பாட்டை இழந்த கார் - லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!

சாலை விபத்து

காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

பெரம்பலூர்: வெடித்த டயர்; கட்டுப்பாட்டை இழந்த கார் - லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!

காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Published:Updated:
சாலை விபத்து

கடலூர் மாவட்டம், முடியனுார் மற்றும் கள்ளக்குறிச்சி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர், இனோவா காரில் திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலுக்குச் சென்று அங்குச் சாமி கும்பிட்டுவிட்டு இன்று வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கின்றனர். காரை கதிரவன் என்பவர் ஓட்டியிருக்கிறார். கார் திருச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் வழியாகச் சென்றுகொண்டிருந்தது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

அப்போது, பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமம் அருகே வந்தபோது டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் இடித்து எதிர்த்திசையில் பூலாம்பாடி கிராமத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியின் மீது பலத்த சத்தத்துடன் மோதியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் காரில் பயணம் செய்த கண்ணன், தமிழரசி, கார்முகில், கதிரவன் லிங்கேந்திரன் ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்து
சாலை விபத்து

மேலும், காரில் பயணம் செய்த வேதவள்ளி, கிஷோர், சந்திரவதனன், கதிரவன் ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கிஷோர் என்பவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாலை விபத்து
சாலை விபத்து

காரில் பயணம் செய்த திவாகர் காயமின்றி உயிர் தப்பினார். இது குறித்து, பெரம்பலுார் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism