Published:Updated:

`ஒருவழிப் பாதையை அறியாத டிரைவர்?!’- பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்

விபத்து
News
விபத்து

திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்களின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால், 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர், துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது மகள், பேரக்குழந்தைகளுடன் மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி இரண்டு கார்களில் வந்துகொண்டிருந்தனர்.

கார் மீது மோதிய லாரி
கார் மீது மோதிய லாரி

இன்று நள்ளிரவு, தூத்துக்குடி மடத்தூர் ரோட்டில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடியிலிருந்து கன்டெய்னர் ஏற்றிச்சென்ற லாரி மோதியதில், கார் நொறுங்கியது. இக்கோர விபத்தில், அந்தக் காரில் வந்த சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், பேத்தி ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் டிரைவர் ஜோகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிப்காட் காவல் நிலைய போலீஸார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாவட்ட எஸ்பி அருண்பால கோபாலன், விபத்து நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர்
பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர்

இந்த விபத்தினால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறமும் ஒரு கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், சுபாஷ் சந்திரபோஸ், அவரது மனைவி பிரபா, மகள் கவிதா ஆகியோர் மற்றொரு காரில் வந்ததால் விபத்திலிருந்து தப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணக்கூடிய சாலை. இந்தச் சாலையின் வழியே சரக்கு போக்குவரத்திற்காக பெரிய பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். விபத்து நடந்த பகுதியில் உள்ள மற்றொரு பாலத்தில் வேலை நடந்துவருவதால், தற்போது ஒருவழிப்பாதையாக உள்ளது.

எஸ்பி அருண்பால கோபாலன்
எஸ்பி அருண்பால கோபாலன்

இதை அறியாத கார் டிரைவர், வழக்கமான சாலை என நினைத்து காரை ஓட்டி வந்திருக்கலாம். அதானால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். வேலை நடைபெறும் பகுதியிலும், அதற்கு முன்புற, பின்புறச் சாலையிலும் பெரிய அளவில் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும்” என அப்பகுதியினர் கூறினர். திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 சிறுமி, ஒரு சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.