Published:Updated:

புதுக்கோட்டையில் இடி தாக்கி 4 பெண்கள் பலி; 17 பேர் படுகாயம்! - விவசாயப் பணி செய்தபோது நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகே வயலில் விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்கள் மீது இடி தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இடி தாக்கி பலியானவர்
இடி தாக்கி பலியானவர்

புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இடி, மின்னலுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில்தான், வைத்தூர் அருகே தண்ணீர்ப் பந்தல் பட்டி பகுதியில் வைத்தூர், தொழுதாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் பெண்கள் 20 பேர் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இடி தாக்கி பலியானவர்கள்
இடி தாக்கி பலியானவர்கள்

தொடர்ந்து மழை பெய்ததால், அங்கு தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைத்து அதில், வேர்க்கடலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் கூடாரம் அருகே பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இடி தாக்கியதில் வைத்தூரைச் சேர்ந்த கலைச்செல்வி (45), லட்சுமி அம்மாள்(64), சாந்தி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சித்ரா, நாகலெட்சுமி, ஜெயலெட்சுமி, ரெங்கம்மாள், தமிழரசி உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

தாயைக் கண்டுபிடித்தார் டேவிட் சாந்தகுமார்! - முடிவுக்கு வந்தது 39 வருடப் போராட்டம்
இடி விழுந்த இடம்
இடி விழுந்த இடம்

பொதுமக்கள் இவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், விஜயா (45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


சிகிச்சை பெற்று வரும் பெண்கள்
சிகிச்சை பெற்று வரும் பெண்கள்
ஆர் வெங்கடேஷ்

இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, எஸ்.பி செல்வராஜ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறும்போது, "இடி தாக்கி பெண்கள் இறந்த சம்பவம் வருத்தமளிக்கிறது.

விபத்தில் உயிரிழந்த காயமடைந்தவர்களின் முழுவிவரங்களைச் சேகரித்து அரசுக்கு அனுப்பி உள்ளோம். இவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். தொடர் மழைப்பொழிவின் போது, திறந்த வெளியில் இதுபோன்ற பணிகள் செய்வதை தவிர்த்திட வலியுறுத்தி உள்ளோம்.

பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்
பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்

அறுந்துகிடக்கும் மின்கம்பிகளுக்கு அருகில் செல்லாமல் இருத்தல், நீர் நிலைகள் அருகே குழந்தைகள் விளையாடாமல் இருத்தல், கால் நடைகளை திறந்தவெளியில் கட்டி வைக்காமல் இருத்தல் போன்றவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.