Published:Updated:

திருச்சி: நேபாள விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

திருச்சி: நேபாள விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

திருச்சி, செப்.28,2011

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு திருச்சியில் பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த 8 பேரின் உடல் இன்று காலை 7 மணியளவில் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் ‌அவர்களது உ‌டல் வைக்கப்பட்டது. அவர்களின் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக எம்.பி. குமார், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி, திருச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர், மனோகரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

ஏராளமான பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். பின்னர், 8 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு