Published:Updated:

டெல்லி கட்டட விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு

டெல்லி கட்டட விபத்து: பலி 8 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி, செப்.28,2011

டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானதில் பலியானோர் எண்ணிக்‍கை 8-ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி ஜாமா மசூதி பகுதியில் இருந்த 3 மாடி கட்டடம் திடீரென செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

இதில் கட்டட இடிபாடுகளில் சிக்‍கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்‍கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.

கட்டட இடிபாடுகளில் மேலும் 15 பேர் சிக்‍கி இருக்‍கலாம் என சந்தேகிக்‍கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

65 ஆண்டுகள் பழமையான அந்த கட்டடத்தையட்டி நடைபெற்ற கட்டுமானப் பணிக்காக, அஸ்திவாரம் தோண்டியதாலேயே இந்த விபத்து நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு