Published:Updated:

'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குநர் சரவணன் சாலை விபத்தில் படுகாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெரம்பலூர்: 'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குநர் சரவணன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர் சரவணன், 'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி', 'வலியவன்' உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குநர் சரவணன் சாலை விபத்தில் படுகாயம்!

இந்நிலையில், இயக்குனர் சரவணன் மற்றும் அவரது மைத்துனரும், உதவி இயக்குனருமான கௌதம் ஆகியோர், நாமக்கல் மாவட்டம், வரகூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு சென்று விட்டு, இன்று சென்னைக்கு திரும்பி சென்றனர். அவர்களது கார், பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, கார் டயர் வெடித்ததில், கட்டுபாட்டையிழந்த கார் டிவைடரில் மோதி தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில், இயக்குனர் சரவணனுக்கு கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், உதவி இயக்குநர் கௌதமுக்கு வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், ரத்தம் நிற்காமல் வெளியேறி கொண்டிருந்தால், பெரம்பலூர் தனலெட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குநர் சரவணன் சாலை விபத்தில் படுகாயம்!

பின்னர், இயக்குனர் சரவணனின் உறவினர்கள் பேசிய பிறகு திருச்சி தென்னூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரவணனுக்கு கை, கால், முதுகு மற்றும் முகத்தில் பயங்கர காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கெளதமுக்கு அடிவயிற்றில் அடிபட்டியிருந்தாலும், அவர் சுயநினைவோடு நன்றாக பேசிக்கொண்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் செய்யும் சின்ன தவறுகளால் உயிரை இழக்கிறோம் என்று மிக அழகாக 'எங்கேயும் எப்போதும்' படத்தில் சொல்லியிருக்கிறார் சரவணன். ஆனால், அவரே இப்போது சாலை விபத்து விபத்துகுள்ளாகி இருப்பது வேதனையாக இருக்கிறது.

எம்.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு