Published:Updated:

புனே: பிரேக் பிடிக்காத டேங்கர் லாரி மோதி 48 வாகனங்கள் அடுத்தடுத்து சேதம்... 30 பேர் காயம்!

விபத்தில் சேதமடைந்த வாகனம்

புனேயில் பிரேக் பிடிக்காத டேங்கர் லாரி மோதி 48 வாகனங்கள் சேதமடைந்தன. 30 பேர் காயம்டைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நேற்று இரவு 9 மணிக்கு மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையிலுள்ள நவாலே மேம்பாலத்தில் புனே நோக்கிச் சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென பிரேக் பிடிக்காமல் எதிரில் சென்ற வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதிக்கொண்டது. டேங்கரில் இருந்த ஆயில் சாலையில் கசிந்து சாலை முழுக்க ஆயிலாக மாறியது. டேங்கர் மோதிக்கொண்டபோது பின்னாலிருந்து வேகமாக வந்த வாகனங்கள் திடீரென பிரேக் போட்டதால் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இந்த விபத்தில் 40-க்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்தன. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்புத்துறையினரும், புனே போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால் 2 கிலோமீட்டருக்கும் அதிகமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

புனே: பிரேக் பிடிக்காத டேங்கர் லாரி மோதி 48 வாகனங்கள் அடுத்தடுத்து சேதம்... 30 பேர் காயம்!

போலீஸாரும் தீயணைப்புத்துறையினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு சேதமடைந்த வாகனங்களைச் சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்த பல மணி நேரம் ஆனது. தீயணைப்புத்துறையினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாலை வரை மீட்புப்பணிகள் நடந்தன. அதன் பிறகுதான் போக்குவரத்து சீரடைந்தது. தற்போது விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடந்துவருகின்றன. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான் மும்பை-புனே நெடுஞ்சாலையில் மாருதி கார் ஒன்று லாரியின் பின்புறமாகச் சென்று மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.