Published:Updated:

லாரியை கார் முந்த முயன்ற நொடி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! - பெண்பார்க்க சென்றபோது சோகம்

கா.முரளி

திருவண்ணாமலை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில், காரில் பயணம் செய்த 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

திருவண்ணாமலை விபத்து
திருவண்ணாமலை விபத்து

திருவண்ணாமலையிலிருந்து செங்கம் நோக்கிச் சென்ற லோடு லாரியும் பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த காரும், செங்கம் சாலையில் அய்யம்பாளையம் அருகே எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில், காரில் வந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

புதுக்கோட்டையில் 7 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! - 5 பேர் பலி
திருவண்ணாமலை விபத்து
திருவண்ணாமலை விபத்து

இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ``பெங்களூர் கோரமங்களா நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் ரெட்டி அவரின் மனைவி சந்திரா, மகள் ஷாலினி, மகன்கள் பரத், சந்தீப் ஆகிய 5 பேரும், பெண் பார்ப்பதற்காக காரில் திருவண்ணாமலைக்கு வந்துகொண்டிருந்தனர். அவர்கள் செங்கம் அடுத்த அய்யம்பாளையம் அருகே வந்தபோது, காருக்கு முன்னே சென்ற வாகனத்தை முந்தியுள்ளனர்.

Vikatan

அப்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கி காரில் பயணம் செய்த ஸ்ரீநாத் குடும்பத்தினர் 5 பேரும் பலியானார்கள். அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை விபத்து
திருவண்ணாமலை விபத்து

இந்த விபத்தில், லாரி டிரைவர் பலத்த காயத்தோடு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பெண் பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த இந்தக் கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.