Published:Updated:

மதுரை: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உடல் சிதறி 5 பேர் பலி... தீவிர சிகிச்சையில் 13 பேர்!

மதுரை

வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உடல் சிதறி 5 பேர் பலி... தீவிர சிகிச்சையில் 13 பேர்!

வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மதுரை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வானவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவ இடத்தில் அமைச்சர், கலெக்டர்
சம்பவ இடத்தில் அமைச்சர், கலெக்டர்

உசிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் திருவிழாக்களுக்கு வெடிக்கும் சக்தி வாய்ந்த வானவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. அழகுசிறை கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவர் நடத்தி வந்த ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் முழுவதும் தரைமட்டமாகின.

பயங்கர சத்தம் கேட்டு அருகிலுள்ள மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் பலர் உடல் சிதறி உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தரைமட்டமான ஆலை
தரைமட்டமான ஆலை

பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவசி, வல்லரசு, பிரேமா, விக்கி, கோபி ஆகியோர் இந்த விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், படுகாயமடைந்த 13 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தப் பகுதியில் இதுபோன்ற பட்டாசு ஆலைகள் எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் அதிகாரிகளை சரிக்கட்டி நடத்தப்பட்டு வருவதாகவும், இங்கு எத்தனைபேர் வேலை செய்கிறார்கள் என்ற விவரங்கள்கூட இருக்காது என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

மீட்புப்ப்பணி
மீட்புப்ப்பணி

சம்பவ இடத்தை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.