Published:Updated:

மகாராஷ்டிரா: அதிகாலையில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதி விபத்து; 50 பேர் காயம்!

விபத்துக்குள்ளான ரயில்

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதில் 50 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா: அதிகாலையில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதி விபத்து; 50 பேர் காயம்!

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதில் 50 பேர் காயமடைந்தனர்.

Published:Updated:
விபத்துக்குள்ளான ரயில்

இன்று அதிகாலை பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயில் சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரிலிருந்து ஜோத்பூருக்குச் சென்றுகொண்டிருந்தது. ரயில் மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா ரயில் நிலையத்தின் புறநகர்ப் பகுதிக்கு அதிகாலை 2:30 மணிக்கு வந்தது. அப்போது கோண்டியாவில் ரயில் எதிர்பாராதவிதமாக சரக்கு ரயிலின் பின்புறம் மோதிக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் சிக்னல், தண்டவாளத்தை கவனிப்பதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த விபத்து நடந்தது எனச் சொல்லப்படுகிறது. பயணிகள் ரயில், சரக்கு ரயில் நிற்கும் பாதையில் செல்வதைக் கடைசி நேரத்தில்தான் பயணிகள் ரயிலின் மோட்டார்மேன் கவனித்தார். இதனால் எமர்ஜென்சி பிரேக் போட்டுப்பார்த்தார். ஆனாலும் பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோதுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விபத்தில் பயணிகள் ரயிலில் இருந்த 50 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா: அதிகாலையில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதி விபத்து; 50 பேர் காயம்!

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலுதவிக்கு பிறகு 49 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். உயிர்ச்சேதம் கிடையாது என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில், ராய்பூரிலிருந்து நாக்பூருக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலைநிறுத்தினர். அதிகாலை 5:24 மணிக்கு இந்தப் பணிகள் முடிந்தன. ரயில் கோண்டியா ரயில் நிலையத்துக்கு 5:44 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்தச் சம்பவத்தால் பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.