Published:Updated:

உ.பி: கன்வர் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி!

உத்தரப்பிரதேசம் ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் கன்வர் யாத்திரையில் ஈடுபட்ட பக்தர்கள் மீது லாரி மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்வர் யாத்திரையில் ஈடுபட்ட பக்தர்கள் மீது லாரி மோதியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்து குறித்து ஆக்ரா மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா கூறியதாவது, `` உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் இன்று சுமார் 2:15 மணியளவில் கன்மார் யாத்திரையில் ஈடுபட்ட பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
ட்விட்டர்

இவர்கள் ஹரித்துவாரிலிருந்து குவாலியருக்கு கன்வர் யாத்ரீகர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஓட்டுநர் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. விரைவில் குற்றவாளி கைதுசெய்யப்படுவார்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!