Published:Updated:

திருச்சியில் தொடரும் சாலை விபத்துக்கள்... திகிலில் மக்கள்!

திருச்சியில் தொடரும் சாலை விபத்துக்கள்... திகிலில் மக்கள்!
திருச்சியில் தொடரும் சாலை விபத்துக்கள்... திகிலில் மக்கள்!

திருச்சியில் தொடரும் சாலை விபத்துக்கள்... திகிலில் மக்கள்!

திருச்சி: திருச்சியில் அடுத்தடுத்து நடைபெறும் பெரும் விபத்துக்களை தடுக்க,  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் அரங்கேறிய 5 பெரும் விபத்துக்களில்  திருச்சி சுற்றுவட்டாரத்தில் மட்டும் 5 பேர் பலியானதோடு, 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர்.

திருச்சியில் தொடரும் சாலை விபத்துக்கள்... திகிலில் மக்கள்!

காட்டூர் அம்மன் நகர் பகுதியிலிருந்து டிப்பர் லாரி ஒன்று,  தஞ்சை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது,  பட்டுக்கோட்டையிலிலிருந்து திருப்பூரை நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி தி.மு.க மகளிர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய 27 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம், திருச்சி குண்டூர் எம்.ஐ.டி அருகே லாரியும் பேருந்தும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்,  20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இப்படியான சூழலில், இன்று (10-ம் தேதி) சேலம், அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள்,  சேலத்தில் இருந்து நாகூருக்கு  சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 7.30 மணியளவில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த காரை, டெம்போ முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த கொங்குநாடு பொறியியல் கல்லூரியின் பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது.

திருச்சியில் தொடரும் சாலை விபத்துக்கள்... திகிலில் மக்கள்!

இந்த விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. டெம்போ வேன் ஓட்டுநர் உட்பட 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற அடுத்தடுத்த விபத்துக்கள் பொதுமக்களுக்கு உயிர் பயத்தை உருவாக்கியுள்ளது. எனவே, இதுகுறித்து அரசு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சி.ஆனந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு